தமிழகத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு அரசு கல்வி கடன் வழங்கி வருகிறது. அதன்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ மாணவிகளை உயர்கல்விக்கு ஊக்குவிக்கும் வகையில் வருகிற 20-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் கல்வி கடன் மேளா சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதனால் கல்விக்கடன் பெற விரும்பும் மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
Categories