Categories
அரசியல்

விமர்சிக்க மாட்டோம்…! அதிமுகவுடன் இணையும் விஜய் மக்கள் இயக்கம்…. ராஜன் செல்லப்பா…!!!

விஜய் மக்கள் இயக்கம் அதிமுக கூட்டணியுடன் இணைய வாய்ப்புள்ளதால் விமர்சிக்கவில்லை என்று எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கூறியுள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய எம்எல்ஏ ராஜன் செல்லப்பா உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தாலும் வீறுகொண்டு எழுந்து பீனிக்ஸ் பறவையைப் போல ஆட்சியை பிடிக்கும். கடந்த 2011ம் வருடம் நடைபெற்ற நகராட்சி, மாநகராட்சி தேர்தலில் 10 மாநகராட்சியில் அதிமுக வென்றது. அப்போது திமுக அழிந்து விடும் என்று நாங்கள் கூறவில்லை. எனவே அதிமுக அதிக தொகுதிகளை வென்று மீண்டும் ஆளும் கட்சியாக வரும். தற்போதைய திமுக அரசு சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. அதனை மக்களுக்கு எடுத்துச் செல்லும் பணியில் அதிமுக தொடர்ந்து செயல்படும்.

விஜய் மக்கள் இயக்கம் ஒன்றிய மாவட்ட தேர்தலில் ஜெயிக்கவில்லை. வார்டு கவுன்சிலர் தேர்தலில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார்கள். அவர்களுடைய வெற்றியை நாங்கள் வரவேற்கிறோம். அவர்களுடைய வெற்றி குறித்து நாங்கள் விமர்சனம் செய்யவில்லை ஏனென்றால் நாளை அவர்கள் அதிமுக கூட்டணியுடன் இணைய வாய்ப்பு உள்ளது. அதனால் ஆளுங்கட்சியை எதிர்ப்பவர்களை ஒன்று சேர்க்கும் சக்தி அதிமுகவிற்கு இருக்கிறது. ஆளுங்கட்சியை விமர்சிப்பவர்களை நாங்கள் விமர்சிப்பதில்லை. எதிர்ப்பவர்களை ஒன்றிணைத்து நாளை வியூகம் அமைக்க வாய்ப்புள்ளது. அதற்கான தொடக்கம் தான் இந்த பொன்விழா ஆண்டு என்று கூறியுள்ளார்.

Categories

Tech |