Categories
உலக செய்திகள்

உங்களுக்கு நல்ல வாய்ப்பு இருக்கு…. நிர்மலா சீதாராமன் பேச்சு…. வெளியிட்ட டுவிட்டர் பதிவு….!!

இந்தியாவில் முதலீட்டாளர்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கு நல்ல வாய்ப்பிருப்பதாக மத்திய நிதி மந்திரியான நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார்.

அமெரிக்க நாட்டிற்கு மத்திய நிதி மந்திரியான நிர்மலா சீதாராமன் சுற்றுபயணம் சென்றார். அங்கு வாஷிங்டனில் நடைபெற்ற சர்வதேசம் நிதியம் உலக வங்கி வருடாந்திரத்தின் கூட்டங்களில் அவர் பங்கேற்றார். மேலும் இந்திய, பொருளாதார, நிதி கூட்டாண்மை உரையாடலின் 8-வது மந்திரிகள் கூட்டத்தில் நிர்மலா சீதாராமன் மற்றும் அமெரிக்க நிதி மந்திரியான ஜேனட் யெல்லன் கூட்டாக தலைமை ஏற்றுக் கொண்டனர். அதன்பின் நிர்மலா சீதாராமன் கடந்த வெள்ளிக்கிழமையன்று நியூயார்க் நகரத்திற்குச் சென்றுள்ளார். அங்கு வட்டமேசை சந்திப்பாக உலகளாவிய தொழிலதிபர்கள், முதலீட்டாளர்கள் நிகழ்ச்சிக்கு “பிக்கி” என்று அழைக்கப்படுகிற வர்த்தக தொழில் சம்மேளனமும், அமெரிக்க இந்திய பாதுகாப்பு கூட்டாண்மை மன்றமும் ஏற்பாடு செய்யப்பட்டது .

இந்நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன் பங்கேற்று பேசியபோது “இந்தியாவினில் தெளிவான அர்ப்பணிப்பு உள்ள தலைமையுள்ளது. ஆகவே இந்தியாவில் அனைத்து முதலீட்டாளர்களுக்கும், தொழில் அதிபர்களுக்கும் நல்ல வாய்ப்புகள் இருப்பதை நான் பார்க்கிறேன். மேலும் இந்தியாவில் புதிதாக தொடங்கப்படுகிற ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் பிரம்மாண்டமான வளர்ச்சியை அடைந்துள்ளது. அதில் பலரும் தற்போது மூலதனச்சந்தை மூலமாக கொண்டு பணம் திரட்டுகின்றனர். இந்த வருடம் மட்டுமே அவற்றின் 16 நிறுவனங்கள் “யூனிகார்ன்”களாக தகுதி பெற்றுள்ளன. இதில் யூனிகார்ன் என்பது 1 பில்லியன் டாலர் அதாவது, சுமார் 7,500 கோடி ரூபாய் மதிப்பை எட்டுக்கின்ற நிறுவனங்களாகும். இந்தியா மிக சவாலான காலங்களிலும் கூட டிஜிட்டல் மயமாக்கலின் ஆற்றலை முழுமையாக பயன்படுத்தி வருகிறது.

அதுமட்டுமின்றி நிதித்துறையில் தொழில்நுட்பத்தின் பங்கு, பணம் சேர்ப்பதற்கான எல்லையை முன்னே தள்ளுவதற்கு உதவுகிறது. இதில் நிதி தொழில்நுட்பம் முக்கிய பங்காற்றுகிறது” என்று அவர் கூறியுள்ளார். இதனைதொடர்ந்து மாஸ்டர் கார்டு நிறுவனத்தின் செயல் தலைவரான அஜய் பங்கா, தலைமை செயல் அதிகாரியான மைக்கேல் மீபாச், பெட்எக்ஸ் கார்ப்பரேஷன் தலைவர் சுப்பிரமணியம், சிட்டி குழுமத்தின் தலைவரான ஜேன் பிராசர், ஐ.பி.எம் தலைவர் அரவிந்த் கிருஷ்ணா, புரூடென்ஷியல் பைனான்சியல் நிறுவனத்தின் சர்வதேச வர்த்தக தலைவர் ஸ்காட் ஸ்லேஸ்டர், லெகட்டும் நிறுவனத்தின் தலைமை முதலீட்டு அதிகாரி பிலிப் வாசிலியோ போன்றோரையும் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சந்தித்துப் பேசியுள்ளார்.

அதன்பின் மாஸ்டர் கார்டு நிறுவனத்தின் செயல் தலைவர் அஜய் பங்கா தலைமை செயல் அதிகாரி மைக்கேல் மீபாச்சுடனான சந்திப்பு குறித்து நிதி அமைச்சகம் டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “இந்த சந்திப்பு நிதி சேர்க்கை, டிஜிட்டல் மாற்றத்துக்கான முயற்சிகள் மற்றும் முன்னேற்றத்திற்கான விவாதத்தின் ஒரு பகுதியாக அமைந்தது என கூறப்பட்டுள்ளது. இந்த சந்திப்புக்குப் பின் மாஸ்டர் கார்டு நிறுவனத்தின் செயல் தலைவர் அஜய் பங்கா கூறியபோது “இந்தியா அதன் தொடர் சீர்திருத்தங்களுடன் சிறந்த பாதையில் இருக்கிறது. அவற்றில் பெரும் வேகத்தை காணமுடியும். அதிலும் குறிப்பாக உற்பத்தியுடன் சேர்ந்த ஊக்கத்தொகை திட்டம் என்னை கவர்ந்துள்ளது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |