புதுச்சேரி மாநிலத்தில் மசாஜ் சென்டர் பெயரில் பாலியல் தொழில் செய்து வந்தவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
புதுச்சேரி மாநிலத்தில் மசாஜ் ஸ்பா என்ற பெயரில் பல ஸ்பாக்கள் செயல்பட்டு வருகின்றது. இதில் ஆண்களுக்கு முடி வெட்டுதல், சேவிங் மசாஜ், போன்றவற்றை செய்து வருகின்றனர். இதை அனைத்தையும் பெண்களை விட்டு செய்வதால் பல வாலிபர்கள் அங்கு குவிந்து வருகின்றன. சுற்றுலாப் பயணிகள் அங்கு படையெடுத்து வருகின்றன. இந்நிலையில் மசாஜ் ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு ஏராளமான புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. இதையடுத்து நேற்று மதியம் போலீசார் திடீரென்று அந்த ஸ்பாக்களில் சோதனை செய்தனர்.
காமராஜ் சாலை, சாரம் மார்க்கெட் அருகே உள்ள ஸ்பா, அண்ணா நகர் 6வது குறுக்கு தெருவில் உள்ள வீடு, மறைமலையடிகள் சாலையில் இயங்கி வரும் ஸ்பா ஆகிய இடங்களில் தீவிர சோதனை நடைபெற்றது. அப்போது அங்கு முடி வெட்ட வரும் வாலிபர்களுக்கு ஆசையை தூண்டி அங்கு இருக்கும் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்களை மீட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் இந்த தொழிலிலை நடத்திய 2 பெண்கள் உள்ளிட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.