குழந்தை ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வளையக்கரணை உமையாள் பரணஞ்சேரி பகுதியில் சுதாகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கிரஸ்சரில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி பிரதீஷா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த 2 1/2 வயது குழந்தையான பிரதீஷா திடீரென காணவில்லை. அதன்பின் குழந்தை காணவில்லை என தெரிந்ததும் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அருகாமையில் இருக்கும் ஏரி பகுதிகளில் தேடி பார்த்துள்ளனர்.
பின்னர் எங்கு தேடியும் பிரதீஷா கிடைக்காத காரணத்தினால் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் விரைந்து சென்று ஏரிப் பகுதியில் குழந்தையை தேடியுள்ளனர். இதனையடுத்து நீண்ட நேரம் தேடியும் குழந்தை கிடைக்கவில்லை.
அதற்குப் பிறகு ஏரியில் குழந்தை சடலமாக மிதந்துள்ளது. இது பற்றி தகவலறிந்த காவல்துறையினர் ஏரி பகுதிக்கு விரைந்து சென்று குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.