இந்திய அணியுடன் சேர்ந்து தனது பணியை தொடங்கி உள்ளார் எம்.எஸ் தோனி.
7ஆவது டி20 உலக கோப்பை டி-20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடக்கிறது. இதில் 6 ஆட்டங்கள் மட்டுமே ஓமனில் நடைபெறுகிறது.. நேற்று ஓமனில் முதல் சுற்று போட்டிகள் தொடங்கியுள்ளது.. இந்த டி20 உலக கோப்பை தொடர் நவம்பர் 14ஆம் தேதி வரை நடைபெறுகிறது
இந்திய அணி இன்று துபாயில் இரவு 7:30 மணிக்கு இங்கிலாந்து அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் மோதுகிறது. அதனைத் தொடர்ந்து 20 ஆம் தேதி ஆஸ்திரேலிய அணியுடன் பயிற்சி ஆட்டத்தின் மோதுகின்றது.. பின்னர் அனைவரும் எதிர்பார்க்கும் ‘குரூப் 12’ பிரதான சுற்றில் பாகிஸ்தான் அணியை 24ஆம் தேதி எதிர்கொள்கிறது இந்தியா.. இந்த போட்டிக்கு தான் அனைவருமே ஆவலோடு காத்திருக்கிறார்கள்..
தற்போது இந்திய அணி ஒரு வலுவான அணியாக இருக்கின்றது.. இந்திய அணிக்கு ஆலோசகராக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து கடந்த வருடம் ஓய்வு பெற்ற எம்எஸ் தோனியை நியமித்துள்ளது பிசிசிஐ. தோனியின் அனுபவம், தலைமைபண்பு, முடிவெடுக்கும் திறமை போன்ற அனைத்தும் வீரர்களுக்கு சரியான அளவில் உதவும் என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளது பிசிசிஐ.. அது மட்டுமில்லாமல் தனக்கு சம்பளம் வேண்டாம் என்று தோனி சொல்லியிருப்பது வரவேற்கத்தக்கது.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் ஆலோசகராக அந்த பணியை தொடங்கியுள்ளார் எம்எஸ் தோனி.. இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பிசிசிஐ நேற்று புகைப்படங்களை வெளியிட்டு பதிவிட்டுள்ளதாவது, கிங் தோனியை மிக அன்பாக வரவேற்கிறோம்.. டீம் இந்தியாவுடன் மீண்டும் ஒரு புதிய பணியில் தோனி இணைந்துள்ளார் என்று பதிவிட்டுள்ளது.. இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது..
Extending a very warm welcome to the KING 👑@msdhoni is back with #TeamIndia and in a new role!💪 pic.twitter.com/Ew5PylMdRy
— BCCI (@BCCI) October 17, 2021