காதலியை சீரழித்து வாடகைத் தாயாக மாற்றி வாலிபர் செய்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் நவி மும்பையில் உள்ள ஒரு ஆய்வகத்தில் வாலிபர் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். அவருக்கு இளம்பெண் ஒருவர் இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கமாகியுள்ளார். அந்தப் பெண்ணுக்கு வாலிபர் காதல் வலையை விரிக்க, அவரும் அதில் மாட்டிக் கொண்டார். அந்த இளைஞனை நம்பிய இளம்பெண் அடிக்கடி அவரது ஆய்வகத்திற்கு வந்து தனியாக பேசி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். பின்னர் இந்த பெண்ணை ரேஷ்மா என்ற பெண் மூலம் வாடகை தாயாக ஒரு பணக்கார தம்பதி 4.5 லட்சம் ரூபாய் பேரம் பேசி பணத்தையும் வாங்கிக்கொண்டு உள்ளார்.
பின்னர் ஹைதராபாத்தில் ஒரு கிளினிக்கில் இந்த பெண்ணை பரிசோதனை செய்தபோது இந்த பெண்ணுக்கு வாடகைத்தாய் ஆகும் தகுதி இல்லை என்று கூறவே, அவர்கள் அந்த பெண்ணை அனுப்பி விட்டனர். இதையடுத்து அந்த இளைஞர்களிடம் இந்த தகவலை கூறி 4.5 லட்சம் பணத்தை திருப்பிக் கொடுக்குமாறு கேட்டு உள்ளனர். ஆனால் அந்த பெண்ணின் காதலன் பணத்தோடு தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். இந்நிலையில் அந்தப் பெண்ணை காணவில்லை என்று அவரின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அப்பெண்ணை கண்டுபிடித்து அவரிடம் விசாரணை செய்தபோது, நடந்த அத்தனையும் கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் அந்த பெண்ணின் காதலனை தீவிரமாக தேடி வருகின்றனர்.