ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது லட்சக்கணக்கான மக்கள் மத்தியில் தனித்துவமாக தெரிந்தவர் வீர தமிழச்சி ஜூலி. போராட்டத்திற்கு முன்பு செவிலியராக பணிபுரிந்து வந்த இவர் அதன்பிறகு பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்று மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். ஆனால் அந்நிகழ்ச்சியில் பல்வேறு எதிர்மறை கருத்துக்களை அவர் பெற்றாலும் அவருக்கு கிடைத்த வாய்ப்புகள் அதிகம் தான்.
கொரோனா பாதிப்பு கட்டுப்படாமல் இருப்பதால் சில நடிகைகள் பிரபலமாகவில்லை. ஆனாலும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். அவ்வகையில் வீர தமிழச்சி ஜூலியும் தனது பங்கிற்கு போட்டோஷூட் மேற்கொண்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி பலவிதமான கருத்துக்களை குவித்து வருகிறது.