தமிழகத்தில் பொதுமக்கள் அரசு துறைகள் தொடர்பான புகார்களை தங்கள் மொபைல் மூலமாக பதிவு செய்ய விரைவில் புதிய வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளது. தமிழக அரசு வழங்கும் சேவைகளைப் பெறுவது குறைபாடு இருந்தால் அது குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். துறைகள் ரீதியாகவும், மாவட்ட அளவிலும் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவ்வாறு துறை ரீதியாக மக்கள் தெரிவிக்கும் புகார்கள் மீது சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
அந்தப் புகார்கள் முதல்வரின் தனிப்பிரிவில் இருந்து அனுப்பப்படுவதால் இவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. இவற்றில் ஆன்லைன் முறையில் தான் மக்கள் விரிவாக புகார் அளிக்கின்றனர். இந்த பிரிவுக்கான தரைவழி தொலைபேசி எண் வாயிலாகசந்தேகங்கள் மட்டுமே கேட்க முடிகிறது ஆனால் புகார்களை பதிவு செய்ய முடிவதில்லை. இந்நிலையில் கடந்த ஆட்சியில் புகார்களை பெற 1100 என்ற பிரத்தியேக எண் அறிவிக்கப்பட்டது. தற்போது இந்த எண் இருந்தாலும் புகார்களை பதிவு செய்ய முடிவதில்லை.
இதையடுத்து பொதுமக்கள் தங்களுடைய புகார்களை மொபைல் போன் மூலமாக எளிதாக பதிவு செய்ய சிறப்பு வசதியை ஏற்படுத்தும் பணியில் தமிழக அரசு இறங்கியுள்ளது. பொதுமக்கள் தங்களின் புகாரை தெரிவித்தால் அது முதல்வரின் தனிப்பிரிவில் பதிவாகும். அதேநேரம் சம்பந்தப்பட்ட துறையின் புகார் பிரிவிலும் பதிவாகும் வகையில் இந்த வசதி ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
அதுமட்டுமல்லாமல் நீங்கள் அளித்த புகா தற்போது யாரிடம் உள்ளது என்பது உள்ளிட்ட விவரங்கள் வெளிப்படையாக தெரிந்து கொள்ளும் வசதி உள்ளது. இதற்காக ஒதுக்கப்படும் தொடர்பில் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தச் செய்தி தமிழக மக்கள் மத்தியில் சற்று நிம்மதி தரும் செய்தியாக அமைந்துள்ளது.