தமிழகத்தின் அரசு ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிக பணிநீக்க காலம் பணிக்காலமாக அறிவிக்கப்பட்டு அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கடந்த 2016, 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் போராட்ட காலங்களில் பணி புரிய வில்லை என்றால் ஊதியம் இல்லை என்றகொள்கை அடிப்படையில் ஊழியர்கள் யாருக்கும் ஊதியம் வழங்கப்படவில்லை. அதுமட்டுமல்லாமல் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மற்றும் குற்றவியல் வழக்குகள் தொடரப்பட்டது.
இந்நிலையில் வேலை நிறுத்த போராட்ட காலமும், தற்காலிக பணிநீக்க காலம் பணிக்காலமாக முறைப் படுத்தப்படுகிறது. அரசு ஊழியர்களின் தற்காலிக பணிநீக்க காலம் பணிக்காலமாக அமல்படுத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்நிலையில் இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மேலும் போராட்ட காலத்தின் போது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவித்துள்ளது. மேலும் ஒழுங்கு நடவடிக்கையால் பதவி உயர்வு பாதிப்படைந்திருந்தால் சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசு.