Categories
தேசிய செய்திகள்

‘இ-ஷ்ரம்’ இணையதளம்… ‘இவங்க தான் அதிக அளவு பதிவு செஞ்சிருக்காங்க’… மத்திய அரசு வெளியிட்ட தகவல்…!!!

இ-ஷ்ரம் இணையதளத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்களில் பெண்களே அதிக அளவு பதிவு செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாட்டிலுள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களின் விவரங்கள் அடங்கிய புதிய போர்ட்டல் ஒன்றை மத்திய அரசு அறிமுகம் செய்தது. அதில் பல துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்களின் எண்ணிக்கை, அவர்களின் சமூக நலத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு கணக்கெடுப்புகள் இடம்பெற்றிருந்தது. மேலும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு திட்டங்களை அவர்களுக்கு நேரடியாக கொண்டு சேர்க்கும் வகையில் மத்திய அரசு இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. இந்த பதிவு மூலம் அரசின் பல்வேறு நலத்திட்டங்களை எளிதாக பெற முடியும். அத்துடன் இந்த கணக்கு வைத்திருக்கும்  தொழிலாளி ஒருவர் விபத்தில் உயிரிழந்தால் ரூ.2 லட்சமும், காயமடைந்தால் ரூ.1 லட்சமும் நிவாரணமாக கிடைக்கும்.

இ-ஷ்ரம் அட்டை 38 கோடிக்கும் மேலான அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டும் என்று மத்திய அரசு இலக்கு வைத்து இருந்தது. இந்த அட்டைக்கு தற்போது வரை நான்கு லட்சம் மக்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில் 50 சதவீதம் பேர் பெண்கள் ஆவார்கள். ஆண்களை விட அதிக எண்ணிக்கையில் பெண் தொழிலாளர்கள் பதிவு செய்திருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் கட்டிடத் துறையில் பணியாற்றும் தொழிலாளர்களே இந்த அட்டைக்கு விண்ணப்பித்துள்ளனர்.

அதேநேரம் ஆட்டோமொபைல், மூலதன பொருட்கள், ஆடை, கல்வி சுகாதாரம், சில்லரை விற்பனை உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் கணிசமானோர் பதிவு செய்து இருப்பதாக மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  இந்த அட்டைக்கு பதிவு செய்தவர்களில் பெரும்பாலானோர் ஒடிசா, மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், பீகார், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் தகவல் கிடைத்துள்ளது.

Categories

Tech |