கர்ப்பிணி பெண்ணை கரடி கடித்து குதறும் வீடியோவானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யா நாட்டில் சர்க்கஸ் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அப்போது சர்க்கஸ் நிகழ்ச்சியில் இருந்த கர்ப்பிணி பெண் ஒருவரை அங்கு இருந்த கரடி கடித்ததாக தெரிகிறது. அந்தப் பெண் கரடியின் பயிற்சியாளராக இருந்தார். இந்நிலையில் அந்த பெண் கர்ப்பமாக இருப்பதால் ஆத்திரமடைந்த கரடி அவரை கடித்துள்ளது. இதுகுறித்து வெளிவந்த வீடியோவில் ஆரம்பத்தில் பெண் பயிற்சியாளர் சொல்வது போல நடந்துகொள்ளும் அந்த கரடி திடீரென அவர் மீது பாய்ந்து தாக்க தொடங்குகிறது. அதற்குள் அங்கு இருந்த ஊழியர்கள் 2 பேர் அந்த கரடியிடம் இருந்து பெண்ணை காப்பாற்ற முயற்சி செய்தனர்.
இதனையடுத்து ஒரு வழியாக அந்த பெண்ணிடமிருந்து மற்ற சர்க்கஸ் ஊழியர்கள் கரடியை விலக்கினர். அதன்பின் அந்தப் பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதில் ஆச்சரியப்படும் வகையில் அந்த பெண்ணுக்கு பெரிய அளவில் காயங்கள் எதுவும் இல்லை. மேலும் அந்த பெண்ணின் வயிற்றில் இருந்த குழந்தைக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. ஆகவே தற்போது அந்த கரடி சர்க்கஸ் நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.