அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சமீப காலமாகவே ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதுகுறித்து கண்டனம் தெரிவிக்கும் விதமாக அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், “நேற்று தமிழகம் முழுவதும் அதிமுக பொன்விழா ஆண்டு நடைபெற்றது. உற்சாகமாக நடைபெற்ற இந்த விழாக்களைக் கண்டு மனம் பொறுக்க முடியாத திமுக விடிந்தவுடன் காவல்துறையை ஏவிவிட்டு லஞ்ச ஒழிப்பு என்ற பெயரில் கோரத்தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறது.
அதிமுக ஆழம் காண முடியாத கடலலைக்கு ஒப்பான பேரியக்கம். இந்த இயக்கம் திமுகவின் முயற்சிகளால் முடங்கிவிடவோ முடியாமற்போகவோ, ஓய்ந்து, சாயப்போவது இல்லை. எத்தனை வழக்குகள் போட்டாலும், அவதூறு பரப்பினாலும் அதிமுக எதிர்காலத்தில் அடையப்போகும் வெற்றிகளை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.