தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் அரசு அவ்வப்போது செய்து கொண்டே வருகிறது. அது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மக்களை தேடி பல் மருத்துவம் என்னும் மருத்துவ சேவையை வழங்க உள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை அரசு பல் மருத்துவ கல்லூரியில், பல் மருத்துவ சேவ கென்ற சென்னை மாநகருக்கு புதிதாக ஒரு வாகனம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இரண்டு இருக்கைகள் கொண்ட இந்த வாகனத்தில் இரண்டு மருத்துவர்கள் மற்றும் இரண்டு செவிலியர்கள் இடம் பெற்றிருப்பார்கள். இவர்கள் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் சென்னையின் பல்வேறு இடங்களுக்கு மக்களை தேடி பல் மருத்துவம் என்ற வகையில் மருத்துவ சேவையை வழங்க உள்ளனர். தமிழகத்தில் நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பெற்றோர்களின் அனுமதியைப் பெற்று பள்ளி மாணவர்களுக்கு இந்த பல் மருத்துவ சேவை வழங்கப்பட உள்ளது.
இன்று முதல் இந்த பல் மருத்துவ சேவை வழங்கும் பணி தொடங்குகிறது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டத்தால் சென்னை மாநகர மக்கள் மட்டுமல்லாமல் பள்ளி மாணவர்களும் பயன்பெறுவார்கள். எந்தெந்த மாவட்டங்களில் எல்லாம் பல் மருத்துவக் கல்லூரி தேவை இருக்கிறது என்று கண்டறிந்து முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று அவற்றை நிறைவேற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.