டி20 உலகக் கோப்பை தொடரில் புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக இந்த வீரர் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்..
14ஆவது ஐபிஎல் கிரிக்கெட் நிறைவு பெற்ற நிலையில், தற்போது டி20 உலக கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. தற்போது முதல் கட்டமாக சூப்பர் 12 சுற்றில் இடம்பெறுவதற்கான தகுதி சுற்றும், பயிற்சி ஆட்டங்களும் நடைபெற்று வருகின்றன.. அனைத்து அணிகளும் இன்று பயிற்சி ஆட்டங்களை துவங்கி விட்டது.. அதன்படி, இன்று நடக்கும் பயிற்சி போட்டியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் இரவு 7:30 மணிக்கு மோதுகின்றன.. அதனைத் தொடர்ந்து இந்திய அணி வருகின்ற 20ஆம் தேதி ஆஸ்திரேலிய அணியுடன் மோதுகிறது.
பின்னர் பிரதான சூப்பர் 12 சுற்றில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது இந்தியா.. ஏற்கனவே உலகக் கோப்பை இந்திய அணியில் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்கள் குறித்து பலரும் பலவிதமான கருத்துகளை கூறி வருகின்றனர்.. அந்த வகையில், இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்..
இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக தீபக் சஹர் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்.. புவனேஷ்வர் குமார் ஒரு நல்ல பிளேயர் தான், அதில் எந்தவித மாற்று கருத்தும்கிடையாது.. ஆனால் தற்போது அவர் நல்ல பார்மில் இல்லை.
அதே சமயம் கடந்த சில ஆண்டுகளாகவே தீபக் சஹர் டி20 கிரிக்கெட்டில் அட்டகாசமாக பந்து வீசி வருகிறார்.. அவரால் இரண்டு பக்கமும் பந்தை ஸ்விங் செய்ய முடியும். அதுமட்டுமில்லை பவர் பிளே ஓவரில் அதிக விக்கெட்டுகளையும் வீழ்த்துகிறார். தற்போது உள்ள சூழ்நிலையில் பார்த்தால் தீபக் சஹர் புவனேஸ்வர் குமாரை விட ஒரு சிறந்த வீரர் என்றுதான் நான் சொல்வேன்.. நிச்சயம் அவர் இந்திய அணியில் இடம் பிடித்து இருக்க வேண்டிய ஒரு வீரர் என்று அவர் கூறியுள்ளார்.
மஞ்ச்ரேக்கர் சொன்னது போலவே, தற்போது ஐபிஎல் தொடரில் புவனேஸ்வர் குமார் பெரிய அளவில் பந்துவீச்சில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.. அதே சமயம் சென்னை அணிக்காக ஆடி வரும் தீபக் சஹர் சிறப்பாக கடந்த 2 ஆண்டுகளாக பந்து வீசி வருகிறார்.. உலக கோப்பையில் தீபக் சஹர் ரிசர்வ் வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.