தமிழகத்தில் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 5 பேருக்கு டி.ஜி.பி. பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
5 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு டி.ஜி.பி யாக பதவி உயர்வும், 4 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பணியிட மாற்றமும், 2 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், டி.ஜி.பி-யாக பதவி உயர்வு பெற்றாலும், சென்னை காவல் ஆணையராக தொடர்ந்து பணியாற்றுவார்.
மேலும் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ள ஏ.கே.விஸ்வநாதன் வீட்டு வசதி கழகத்தின் தலைவராக பணியாற்றுவார். டி.ஜி.பி.,யாக பதவி உயர்வு பெற்றுள்ள ஏ.கே.விஸ்வநாதன், வீட்டு வசதி கழகத்தின் தலைவராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஏ.டி.ஜி.பி., மகேஷ் குமார், சென்னை அமலாக்கத் துறையின் ஏ.டி.ஜி.பி.,யாகவும், ஐ.ஜி., கபில் குமார், சென்னை அமாலாக்கத் துறையின் ஐ.ஜி.,யாகவும் கூடுதல் பொறுப்பு வகிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.