Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சீறிப்பாய்ந்த காளைகள்…. விறுவிறுப்பான ரேக்ளா ரேஸ்…. கண்டு களித்த பொதுமக்கள்….!!

ஊர் பொதுமக்கள் சார்பாக ரேக்ளா பந்தயம் நடைபெற்றதில் காளைகள் அனைத்தும் சாலையில் சீறிப்பாய்ந்து ஓடியது.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள கவுண்டம்பாளையத்தில் ரேக்ளா பந்தயம் நடைபெற்றுள்ளது. இந்த பந்தயத்தில் 300 மீட்டர் மற்றும் 200 மீட்டர் பிரிவுகளில் 200-க்கும் அதிகமான வண்டிகளுடன் காளைகள் பங்கேற்றுள்ளது. இந்நிலையில் இப்போட்டிகளை அமைச்சர்கள் கயல்விழி மற்றும் மு.பெ. சாமிநாதன் ஆகிய இருவரும் தொடங்கி வைத்துள்ளனர்.

இவற்றில் உடுமலை உள்பட பல பகுதிகளில் சேர்ந்த 200-க்கும் அதிகமான வண்டிகள் கலந்து கொண்டுள்ளனர். இதனையடுத்து வெற்றிபெற்ற ரேக்ளா காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் போட்டிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர் சிறந்த முறையில் செய்திருந்தனர்.

Categories

Tech |