Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பூட்டை உடைத்து……. 75 சவரன் தங்கம்….. 30 கிலோ வெள்ளி திருட்டு…… தீவிர விசாரணையில் போலீசார்…!!

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே நகை கடை பூட்டை உடைத்து 75 சவரன் நகை மற்றும் 30 கிலோ வெள்ளி பொருட்களை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம்  அருகே விக்கிரமசிங்கபுரம் பகுதியில் உள்ள ரத்தினம் ஜூவல்லரி என்ற நகை கடையில் வழக்கமாக இன்று கடை திறக்க சென்ற போது பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து நகை கடை உரிமையாளர்கள் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த விக்ரமசிங்கபுரம் காவல் துறையினர் ஆய்வு செய்தனர்.

Image result for பூட்டை உடைத்து நகை திருட்டு

அதில் மின் இணைப்பை துண்டித்து கடையின் பூட்டை உடைக்கும் அங்கே இருந்து 75 சவரன் நகை 30 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்கள் சாட்சியங்களை அளிப்பதற்காக அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா உள்ளிட்ட உபகரணங்களை எடுத்துச் சென்றது  தெரியவந்தது. இது தொடர்பாக நகை கடை ஊழியர் 2 பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |