Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அழகு நிலையம் பெண் கொலை வழக்கு…. ஆதாரமாக கிடைத்த சி.சி.டிவி காட்சி…. போலீஸ் வலைவீச்சு….!!

அழகு நிலைய பெண் உரிமையாளர் கொலையில் தொடர்புடைய 4 நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள அஸ்தம்பட்டி மண்டல குழு முன்னாள் தலைவரான நடேசன் என்பவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான தேஷ் மண்டல் என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவர் பிரதாப் என்பவரை தனது கணவர் என்று கூறி வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார். இந்த பெண் 3 பகுதிகளில் அழகு நிலையம் வைத்து நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் நடேசனின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட பிரதாப் தான் சென்னையில் இருப்பதாகவும், கடந்த 4 நாட்களாக தேஷ் மண்டல் தனது அழைப்பை ஏற்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து நடேசன் அங்கு சென்று பார்த்த போது வீடு பூட்டப்பட்டிருந்ததோடு, அங்கு துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த நடேசன் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வீட்டின் படுக்கை அறையில் இருந்த கருப்பு கலர் சூட்கேசை திறந்து பார்த்துள்ளனர்.

அப்போது சூட்கேசுக்குள் அரைகுறை ஆடையுடன் கை, கால்கள் கட்டப்பட்டு அழுகிய நிலையில் தேஷ் மண்டல் சடலமாக இருந்ததை பார்த்து காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். அதன்பிறகு அவரது சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பிரதாப் தேஷ் மண்டலின் கணவர் இல்லை என்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து பிரதாப்பை காவல்துறையினர் பிடித்து விசாரித்ததில் இருவரும் காதலித்ததால் கணவன் மனைவி போல் வாழ்ந்து வந்துள்ளனர். அதன்பின் சென்னையில் வேலை கிடைத்ததால் பிரதாப் அங்கு சென்று விட்டார்.

இந்நிலையில் தேஷ் மண்டல் தனது அழகு நிலையத்தில் பணிபுரியும் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆணை பக்கத்து வீட்டில் தங்க வைத்துள்ளார். ஆனால் இந்த சம்பவம் நடைபெற்ற பிறகு அவர்கள் 3 பேரையும் காணவில்லை. மேலும் தேஷ் மண்டலுக்கு பாலியல் தொழிலில் ஈடுபட்டு கைதான நபர்களுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய தொடர் விசாரணையில் கொலை நடந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் கண்காணிப்பு கேமராக்களில் ஆய்வு செய்ததில் அழகு நிலையத்தில் வேலை பார்த்த 4 பேர் தேஷ் மண்டல் கொலை செய்யப்பட்ட வீட்டில் இருந்து வெளியில் வருவதும், பின் அவர்கள் கதவைப் பூட்டுவதும், ஆண் ஒருவர் அங்கு பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராவை தள்ளி விடுவதும் பதிவாகி இருந்துள்ளது.

இதனை பார்த்ததில் அவர்கள் 4 பேர் தான் தேஷ் மண்டலை கொலை செய்து இருக்க வேண்டும். பின்னர் அவர்கள் குறித்து விசாரித்த போது அவர்கள் லப்லு, லூசி, ரிஷி, ஷீலா என்பதும், கொலை நடந்த அன்றிலிருந்து 4 பேரும் தலைமறைவாகி இருந்து வருவதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் அவர்கள் 4 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |