மேஷம் ராசி அன்பர்களே..!! குடும்பத்தில் பெண்களால் வீண் பண செலவுகள் கொஞ்சம் ஏற்படும். இடைவிடாத பணியின் காரணமாக வேலைக்கு உணவருந்த முடியாத நிலை ஏற்படும். எடக்கு மடக்காக பேசாமல் நாவடக்கம் இன்று தேவைப்படும். இன்று குடும்பத்தில் இருப்பவருடன் கருத்து மோதல்கள் உண்டாகலாம் .கணவன் மனைவிக்கிடையே இருந்த பூசல்கள் சரியாகும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்குவது மற்றும் அவர்களின் நலனுக்காக பாடுபட வேண்டியிருக்கும். கலைத் துறையைச் சார்ந்தவர்களுக்கு இன்று நல்ல முன்னேற்றமான நாளாக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அதேபோல இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்துக் கொண்டிருந்த வெற்றி வாய்ப்புகளும் கிடைக்கும்.
பாராட்டுகளும் கிடைக்கும். இன்றைய நாள் உங்களுக்கு மதிப்புமிக்க நாளாக இருக்கும். அதே போல மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆசிரியர்களின் சொல்படி மட்டும் நடந்துக் கொள்ளுங்கள். அது போதும். இன்று நீங்கள் வெளியே செல்லும் போது மஞ்சள் நிற அல்லது மஞ்சள் நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள் அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று வியாழக்கிழமை என்பதால் குருமார்களின் வழிபாடு சிறப்பை கொடுக்கும். அதாவது சித்தர்கள் வழிபாடு உங்களுக்கு நன்மை கொடுப்பதாக அமையும். சித்தர்களைவழிபட்டு இன்றைய நாளை சிறப்பான நாளாக மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்