Categories
அரசியல் மாநில செய்திகள்

60 தொகுதிகளில் வென்றால் ஆட்சியை பிடித்து விடலாம்…. பாமக நிறுவனர் ராமதாஸ்….!!!

பாமக நிறுவனர் ராமதாஸ் தேனீக்களையும் தனது கட்சித் தொண்டர்களையும் ஒப்பிட்டு முகநூலில் தகவல் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், அயராது உழைப்புக்கு உதாரணம் என்றால் அது தேனீ தான். தேன் என்பதை இரு எழுத்துக்களில் மிகவும் எளிதாக நாம் கூறி விடுகிறோம். ஆனால் அதன் பின்னணியில் அயராத உழைப்பு உள்ளது. அதுபற்றி நாம் சொல்லிக் கொண்டு போக வேண்டுமென்றால் ஒரு நாள் கூட பத்தாது. தனது குடும்பத்திற்காகவும் அது அயராது பாடு படுகிறது.

அவ்வாறு தங்களின் இனத்திற்கும், குடும்பத்திற்காகவும் தேனீக்கள் இவ்வாறு திட்டமிட்டு கடுமையாக உழைக்கும்போது தமிழ்நாட்டை முன்னேற்றுவதற்காக பாட்டாளிகள் ஏன் கடுமையாக உழைக்க கூடாது?. தமிழ்நாட்டில் அடுத்த ஆட்சி நம்முடையதாக இருக்க வேண்டும். 120க்கும் மேற்பட்ட தொகுதிகளில் நாம் வலிமையாக இருக்கிறோம்.

அவற்றில் 60 தொகுதிகளில் நாம் வெற்றி பெற்றால் தமிழ்நாட்டில் நாம் ஆட்சியை பிடித்துவிடலாம். தேனீக்கள் 90 நாட்கள் மட்டுமே உயிர் வாழும்.ஆனால் அவை அந்த 90 நாட்களில் ஒரு நாள் கூட ஓய்வு எடுப்பதில்லை. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இதை பாட்டாளி மக்கள் மீண்டும் மீண்டும் படிக்க வேண்டும். புதிய உற்சாகத்துடன் தேனீக்களைப் போல உழைக்க வேண்டும்… உழைப்போம் உயர்வோம் என்று கூறி அவர் பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |