மனைவியை குத்திக் கொலை செய்த கணவருக்கு நீதிபதி ஆயுள் தண்டனையை வித்துள்ளார்.
இங்கிலாந்து நாட்டின் லெய்செண்டர் நகரில் காஷிஷ் அகர்வால்-கீதிகா கொயல் என்ற இந்திய தம்பதியினர் வசித்து வந்தனர். கடந்த மார்ச் 3-ஆம் தேதியன்று கீதிகா கொயலை அவருடைய கணவர் காஷிஷ் அகர்வால் குத்தி கொலை செய்துள்ளார். இதனையடுத்து காஷிஷ் அகர்வால் மனைவியின் உடலை உபிங்கம் கிளோஸ் என்ற பகுதியில் உள்ள சாலையோரம் வீசி சென்றுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மார்ச் 6-ஆம் தேதி காஷிஷ் அகர்வாலை கைது செய்தனர்.
இந்த கொலை வழக்கு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். அதில் மனைவி கீதிகா கொயலை கொடூரமாக குத்தி கொலை செய்த குற்றத்திற்காக காஷிஷ் அகர்வாலுக்கு ஆயுள் தண்டனை விதித்து இங்கிலாந்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி குற்றவாளி காஷிஷ் அகர்வால் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.