தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று நான்கு மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அதன்படி சேலம், புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும். நாளை முதல் இரண்டு நாட்களுக்கு தென்மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது. குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.