கன்னிராசி அன்பர்களே..!! இன்று உறவுகளுக்கு இடையே மனகசப்பு கொஞ்சம் உருவாகலாம். முறையற்ற வழிகளில் இன்று பணம் கொஞ்சம் வரக் கூடும். ஆனால் உங்களுடைய நேர்மையான எண்ணம் அதைத் தடுத்து விடும். கோபத்தை மட்டும் குறைத்துவிட்டால் இன்று அனைத்து விஷயங்களுமே நன்மை ஏற்படும். வழக்குகளை ஒத்திப் போடுவது நல்லது. இன்று அடுத்தவருடன் ஏற்படும் பிரச்சினைகளிலும் வாக்குவாதத்திலும் வெற்றியே உங்களுக்கு கிடைக்கும். பணவரவு சிறப்பாக இருக்கும். நீங்கள் எடுக்கக் கூடிய காரியம் வெற்றியை கொடுக்கும். அடுத்தவரை நம்பி மட்டும் நீங்கள் எந்தவிதக் காரியமும் செய்யாதீர்கள். நீங்களே முன்நின்று செய்யுங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் ஆயுதங்கள் நெருப்பு போன்றவற்றைப் பயன்படுத்தும் போது கவனமாக பயன்படுத்துங்கள்.
மனம் மகிழும் படியான சம்பவங்கள் நடக்கும். ஓரளவு அனுகூலமாகவும் இருக்கும். இன்று உடல் பயிற்சி மேற்கொண்டு உடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள். புதிய வாய்ப்புகள் வந்து சேரும். வாய்ப்புகளை சரியான முறையில் ஆராய்ந்து அதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள் அது போதும். இன்று நீங்கள் வெளியில் செல்லும்பொழுது ஊதா நிறத்தில் ஆடை அல்லது கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்தும் சிறப்பாக நடக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வியாழக்கிழமை என்பதால் சித்தர்களை மனதார நினைத்து வழிபட்டு இன்றைய நாளை தொடங்கினால் உங்களுடைய காரியம் சிறப்பாக நடக்கும். உங்களுடைய கர்ம தோசங்கள் அனைத்தும் நீங்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் ஊதா நிறம்