Categories
மாநில செய்திகள்

இன்னும் இரண்டே நாட்களில் மீட்க நடவடிக்கை…. உறுதி அளித்த அமைச்சர் சேகர் பாபு….!!!!

குயின்ஸ் லேண்ட் நிலத்தை யாரும் நெருங்க முடியாத இடம் இல்லை என்றும் இன்னும் இரண்டு நாட்களில் அவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு உறுதியளித்துள்ளார். குயின்ஸ் லேண்ட் நிறுவனம் சட்டவிரோதமாக நிலங்களை ஆக்கிரமித்து வந்ததால் வழக்கு தொடரப்பட்டது. 1998-ஆம் ஆண்டு குத்தகை காலம் முடிவடைந்து விட்ட நிலையில், குயின்ஸ் லேண்ட் தொடர்ந்து நிலத்தை அத்துமீறி ஆக்கிரமித்து இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் குயின்ஸ்லேன்ட் நிறுவனம் ஆக்கிரமித்துள்ள கோவில் நிலங்களை 4 வாரங்களில் மீட்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த நிலை மீட்கப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த நிலம் யாரும் நெருங்க முடியாத இடம் கிடையாது எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

Categories

Tech |