Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

இந்திய அணிதேர்வு… “இப்படி தான் முடிவெடுப்போம்”… பயிற்சியாளர் ரவிசாஸ்திரி!!

பனியின் தாக்கத்தை பொறுத்து இந்திய அணியின் தேர்வு இருக்கும் என்று பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறியுள்ளார்..

டி 20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில்  நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக தகுதி சுற்று போட்டிகள் மற்றும் பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி இங்கிலாந்து அணியை வென்றது. இந்த போட்டியில் கே.எல் ராகுல். இஷான் கிஷன் மிகவும் சிறப்பாக ஆடினர்..

முன்னதாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தின் போது பனியின் தாக்கம் இருந்தது. இந்திய அணி மோதும் ஆட்டங்கள் அனைத்தும் இரவு தான் நடக்கிறது.. எனவே பனி  தாக்கம் அதிகம் இருக்கும் என தெரிகிறது.

இந்நிலையில் டி20 உலகக் கோப்பை போட்டியில் பனியின் தாக்கம் எப்படி இருக்கிறது என்பதை பொருத்தே இந்தியா அணியின் தேர்வு இருக்கும் என்று அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறியுள்ளார்.. இதுகுறித்து அவர் கூறுகையில், உலகக் கோப்பை போட்டியில் பனியின் தாக்கம் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை பார்த்துவிட்டு தான் முதலில் பேட்டிங் செய்வதா? அல்லது பவுலிங் போடுவதாக என்பதை நாங்கள் முடிவு செய்வோம்..

மேலும் கூடுதலாக சுழல் பந்துவீச்சாளர்களை களமிறக்குவதா? அல்லது வேகப்பந்து வீச்சாளர்களை களமிறக்குவதா? என்பது பற்றி முடிவு செய்வோம். கடந்த இரு மாதங்களாக இந்த மைதானங்களில் இந்திய அணி வீரர்கள் ஐபிஎல் போட்டியில் விளையாடி இருக்கின்றார்கள். ஆகவே அவர்கள் அதிக அளவில் தயாராக வேண்டும் என்று நான் நினைக்கவில்லை..

பயிற்சிப் போட்டியில் அனைவரும் பந்து வீசலாம்.. அனைவரும் பேட்டிங் செய்யலாம். ஆகவே  வீரர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை பற்றி ஒரு யோசனை கிடைக்கும்.. அதனை வைத்து  முடிவு செய்வோம் என்று கூறியுள்ளார்..

Categories

Tech |