மத்திய பிரதேச மாநிலத்தில் கள்ளக்காதலியுடன் ஜிம்மில் பயிற்சி எடுத்து வந்த கணவனை மனைவி செருப்பால் அடித்து வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மத்திய பிரதேச மாநிலம் தலைநகர் போபாலில் உள்ள ஒரு உடற்பயிற்சி மையத்திற்கு ஒரு பெண் தனது சகோதரியுடன் வந்துள்ளார். அங்கு தன் கணவன் கள்ளக்காதலி ஒருவருடன் உடற்பயிற்சி செய்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், தனது கணவனிடம் சென்று இதுகுறித்து கேட்கிறார். முதலில் இருவரும் வாயில் தான் சண்டை போட்டுக் இருந்தன. சண்டை முற்றவே ஒருவரையொருவர் தாக்கி கடுமையாக சண்டை போட்டுக் கொண்டனர். இதையடுத்து மனைவி தன் கணவனின் தலைமுடியைப் பிடித்து இழுத்து அவரை செருப்பால் அடிக்கிறார்.
VIDEO: गर्लफ्रेंड के साथ जिम में था पति, पहुंची पत्नी और कर डाली पिटाई#Video #Gym #Violence #Men #Women https://t.co/HDBaONIIhu via @FacebookWatch
— SeithiSolai Tamil (@SeithisolaiNews) October 19, 2021
இதை சுற்றி நின்ற பலரும் தடுக்க முயற்சி செய்தபோதும் அவர் கணவனை விடுவதாக இல்லை. இந்த சம்பவம் குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசாரிடம் இருவரும் ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்தனர். இதையடுத்து கணவன், தன் மனைவி சொல்லும் குற்றச்சாட்டை மறுத்து தனது கள்ளக்காதலி என்று கூறும் அந்த பெண்ணை எனக்கு யாரென்று தெரியாது என அவர் கூறுகிறார். இதற்கு முன்னர் மனைவி தன் கணவன் மீது வரதட்சணை வழக்கு பதிவு செய்திருந்த நிலையில், தற்போது இந்த வழக்கையும் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.