Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக இராசிக்கு…”எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்”… வாக்குவாதத்தை தவிர்த்துவிடுங்கள்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று வியாபாரத்தில் தன லாபம் பெருகி மனம்  மகிழ்ச்சி நிலவும். உடல் தெம்பாகி உற்சாகத்தை கொடுக்கும். புத்திர பாக்கியம் ஏற்படும். தன்னம்பிக்கை கூடுவதால் முயற்சிகள் அனைத்துமே வெற்றியை கொடுக்கும். இன்று கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி இருக்கும். பிள்ளைகள் தொடர்பான காரியங்களை செய்து முடிக்க அலைய வேண்டியிருக்கும். உங்களது செயல்களுக்கு இருந்த முட்டுக்கட்டைகள் விலகிச்செல்லும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பாராத காரியத் தடைகள் விலகி செல்லும். வாகனங்களில் செல்லும்போது மட்டும் கவனமாக செல்லுங்கள். தொலைபேசியில் பேசிக் கொண்டு செல்ல வேண்டாம்.

அதை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். கூடுமானவரை நீங்கள் நண்பரிடம் வாக்குவாதத்தை தவிர்த்துவிடுங்கள். நண்பர்கள் மூலம் இன்று முக்கியமான பணியை மேற்கொள்வதால் கொஞ்சம் நண்பரிடம் பேசும் போது நிதானத்தை மட்டும் கடைபிடியுங்கள். நீங்கள் வெளியில் செல்லும்பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அல்லது மஞ்சள் நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்தும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் சிறப்பான நாளாக இருக்கும். உங்களுடைய கர்ம தோசங்கள் அனைத்தும் நீங்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்

Categories

Tech |