ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் பப்புவா நியூ கினி வீரர் புவா மோரியா ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளார்.
ஐசிசி 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றில் பங்கேற்ற 8 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரித்து மோதுகின்றன. பி பிரிவில் இடம் பெற்றுள்ள ஸ்காட்லாந்து – பப்புவா நியூ கினி அணிகள் மோதின. டாஸ் வென்ற ஸ்காட்லாந்து முதலில் பேட் செய்து 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 165 ரன் எடுத்தது.
கடைசி ஓவரை வீசிய கபுவா மோரியா 19.2ஆம் பந்தில் கிரேவ்ஸ், 19.4ஆம் பந்தில் லீஸ்க், 19.5ஆம் பந்தில் டேவி, 19.6ஆம் பந்தில் வாட் என ஹாட்ரிக் வீழ்த்தி கடைசி ஓவரில் 4 விக்கெட் எடுத்தார். 166 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பப்புவா நியூ கினி களமிறங்கி ஆடி வருகின்றது.
ஸ்காட்லாந்து பேட்டிங்:
பப்புவா நியூ கினி பௌலிங்: