அமேசான் காடுகளில் இருந்து கச்சா எண்ணெய் எடுக்கும் திட்டத்தை அரசு கைவிடக்கோரி பூர்வகுடியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈக்வடார் நாட்டிலுள்ள அமேசான் காட்டு பகுதிகளிலிருந்து கச்சா எண்ணெய் எடுக்கும் அரசின் திட்டத்தினை எதிர்த்து பூர்வகுடியினர் வழக்கு தொடுத்துள்ளனர். கடந்த மே மாதம் அதிபராக பதவியேற்ற குவிலெர்மோ லாசோ அந்நிய முதலீடுகள் மூலம் நாட்டில் கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகரிக்கும் என அரசாணை பிறப்பித்தார்.
இந்த திட்டத்தினை அமேசான் காடுகளில் அனுமதித்தால் அங்கு வந்து 22 பூர்வகுடியினரின் வாழ்வாதாரமானது பாதிக்கப்படும். எனவே இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என பூர்வகுடி சமூகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 2025-ஆம் ஆண்டுக்குள் எண்ணெய் உற்பத்தியை நாளொன்றுக்கு 10 லட்சம் பீப்பாய்க்களாக உயர்த்தப்பட்ட அதிபர் குவிலெர்மோ லாசோ திட்டமிட்டுள்ளார் என்பது அறியப்படுகிறது.