தீபாவளி பண்டிகை நவம்பர் மாதம் 4 தேதி கொண்டாடப்பட உள்ளது. அதற்காக தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது. அதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் குறித்து புகார் செய்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை பேட்டியளித்த அவர், தீபாவளி பண்டிகையின்போது மக்களின் தேவைக்கு ஏற்றவாறு பேருந்துகள் இயக்க அரசு ஏற்பாடு செய்துள்ளது.
சென்னையில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் அரசு பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் விரைவில் பொருத்தப்படும். மேலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எச்சரித்துள்ளார்.