Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர இராசிக்கு… “மனக்கவலை ஏற்பட்டு நீங்கும்”… புத்தி கூர்மையுடன் செயல்படுவீர்கள்.!!

மகரம் ராசி அன்பர்களே..!! இன்று பணவரவு அதிகரிக்கும் நாளாக இருக்கும். உங்களுடைய வாக்கு மேன்மை ஓங்கும். குடும்ப சுகம் கூடி சந்ததி விருத்தி ஏற்படும். அரசு அதிகாரிகளுக்கு பதவி உயர்வு ஏற்படும். இன்று அனைத்து ராஜ யோகங்களும் உங்களுக்கு உண்டாகும். உடல் ஆரோக்கியம் நல்ல படியாக இருக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட பழைய பிரச்சினைகள் தீரும். பிரச்சனைகள் என்று வரும்பொழுது அதில் சிக்காமல் நீங்கள் சாமர்த்தியமாகவும் நழுவிச் செல்வது உங்களுக்கு சிறப்பை கொடுக்கும். மனக்கவலை ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத செலவு கொஞ்சம் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். பலவிதத்திலும் இன்று நன்மை இருக்கும். மற்றவர்களுக்காக வாதாடி வெற்றி வாய்ப்புகளையும் பெறுவீர்கள். புத்தி கூர்மையுடன் செயல்படுவீர்கள். தைரியம் உண்டாகும்.

துணிச்சலுடன் எதிர் கொள்வீர்கள். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் அடைவார்கள். சக மாணவருடன் கொஞ்சம் பொறுமையாக நடந்து கொள்ளுங்கள் அது போதும். இன்று நீங்கள் வெளியில் செல்லும்போதோ அல்லது முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுதோ பச்சை நிற ஆடை அல்லது பச்சை நிறத்தில் கைக்குட்டையை  எடுத்துச் சொல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக நடக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வியாழக்கிழமை என்பதால் சித்தர்களின் வழிபாடு உங்களுக்கு சிறப்பை கொடுக்கும். சித்தர்களின் வழிபாட்டை மேற்கொண்டால் கர்ம தோசங்கள் அனைத்தும் நீங்கும். செல்வ செழிப்புடன் வாழலாம்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை :  கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் நீல நிறம்

Categories

Tech |