Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீனம் இராசிக்கு… “எதிர்ப்புகள் குறையும்”… இன்று நீங்கள் மனம் மகிழும் நாள்..!!

மீனம் ராசி அன்பர்களே..!! இன்று உங்கள் எதிர்பார்ப்புக்கும் மேல் தனவரவு அதிகரிக்கும். எதிர்ப்புகள் குறையும். நண்பர்கள் உதவி நன்மை பயக்கும். தொழில் விரிவாக்க நடவடிக்கைகளுக்கு அரசு உதவிகள் எளிதாக கிடைக்கும். இன்று தொழில் வியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதேபோல எந்த முக்கியமான முடிவு எடுக்கும் பொழுது தீர ஆலோசித்த பின்னரே முடிவு எடுப்பது நல்லது. உத்தியோகத்தில்  இருப்பவர்கள் மேல் அதிகாரிகள், சக ஊழியர்களின் கருத்துக்கு மாற்று கருத்து சொல்லாமல் இருப்பது நன்மையை கொடுக்கும். குடும்ப பிரச்சினைகள் அனைத்தும் கட்டுக்குள் அடங்கி இருக்கும். ஆனாலும் தேவையான இடங்களில் நீங்கள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. இன்றைய நாள்  நீங்கள் மனம் மகிழும் நாளாக இருக்கும்.

வெளியிடங்களுக்கு செல்லும் போது கொஞ்சம் பாதுகாப்பாக செல்லுங்கள். பொருட்கள் மீது கவனம் இருக்கட்டும். மாணவர்களுக்கு  கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கல்வியில் நாட்டம் செல்லும். சக மாணவரிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள் அது போதும். இன்று நீங்கள் முக்கியமான பணியை  மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். அனைத்தும் சிறப்பாக இருக்கும். இல்லையேல் கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அது மட்டுமில்லாமல் இன்று வியாழக்கிழமை என்பதால் சித்தர்களின் வழிபாடு உங்களுக்கு சிறப்புமிக்க வழிபாடாக இருக்கும். கர்ம தோஷங்கள் நீங்கி  மனமும் அமைதியாக காணப்படும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் சிவப்பு நிறம்

Categories

Tech |