முதுமையைக் காரணமாகக் காட்டி பிச்சை எடுக்க விரும்பாத மூதாட்டி பேனா விற்கும் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
பலர் வயதான பிறகு தங்களின் முதுமையின் காரணமாக வைத்து தெருக்களில் பிச்சை எடுத்து வருகின்றனர். இருப்பினும் சில வயதான முதியோர்கள் தங்கள் உயிர் உள்ளவரை உழைத்து தான் சாப்பிடுவோம் என்று வைராக்கியமாக வேலை பார்த்து வருகின்றனர். அதுபோன்று மகாராஷ்டிரா மாநிலத்திலும் ஒரு மூதாட்டி தனது முதுமையை காரணமாக வைத்து பிச்சை எடுக்க விரும்பவில்லை என்று கூறி பேனா விற்று வருகிறார்.
மகாராஷ்டிரா மாநிலம் புனே எம்.ஜி. சாலையில் ரத்தன் என்ற வயதான மூதாட்டி ஒருவர் கையில் நூற்றுக்கணக்கான பெண்களை வைத்துக்கொண்டு அந்த சாலையில் வரும் நபர்களிடம் பேனா விற்பனை செய்து தனது வாழ்க்கையை ஓட்டி வருகிறார். பேனாக்கள் அடங்கிய சிறிய பெட்டியில் ‘நான் பிச்சை எடுக்க விரும்பவில்லை, ஒரு பேனாவின் விலை பத்து ரூபாய் மட்டுமே, இதில் அனைத்து நீலநிற பேனாகளும் உள்ளது’ என்று எழுதியுள்ளார். தள்ளாடும் வயதிலும் உழைத்து சாப்பிட வேண்டும் என்று நினைக்கும் இந்த மூதாட்டியின் செயலுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.