Categories
சினிமா தமிழ் சினிமா

அடுத்த சினேகனாக மாறும் பிக்பாஸ்5 போட்டியாளர்…. சமூகவலைத்தளத்தில் ரசிகர்கள் கருத்து…. யாருன்னு பாருங்க….!!

பிக்பாஸ் போட்டியாளர் அபிஷேக் ராஜாவுக்கு ரசிகர்கள் பலர் எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று. இந்த  நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் அபிஷேக் ராஜா. இவர், சமீபகாலமாக ரசிகர்களின் எதிர்மறை கருத்துக்களை சமூக வலைதளத்தில் பெற்றுவருகிறார்.

100 நாட்கள் என்னால் நடிக்க முடியாது' - பிக் பாஸ் போட்டியாளர் அபிஷேக் ராஜா!

அந்தவகையில், இவர் சக போட்டியாளர்களிடம் மாறி மாறி பேசி அந்நியனாக நடந்துகொள்கிறார் எனவும், பவானிரெட்டி, மதுமிதா போன்ற பெண் போட்டியாளர்களை இவர் சுற்றி சுற்றி வருகிறார் எனவும், சமூக வலைதளத்தில் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும், இவர் பிக்பாஸ் சீசன் 1இல் கலந்து கொண்ட கவிஞர் சினேகனை போன்று சக போட்டியாளர்களை அடிக்கடி கட்டிப்பிடித்து ஆதரவு தெரிவித்து வருகிறார் எனவும், ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |