சுவீடன் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இரண்டு வெவ்வேறு தடுப்பூசிகளை போட்டுக் கொண்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சுவீடன் நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வில் அஸ்ட்ராஜெனகா தடுப்பூசியை முதல் தவணையாகவும், பைசர் தடுப்பூசியை இரண்டாவது தவணையாகவும் போட்டுக்கொண்டால் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி அதிக அளவில் கிடைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் பிரபல ஐரோப்பிய பத்திரிகை இதழ் ஒன்றில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. அந்த ஆய்வில் சுமார் 7 லட்சம் பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதையடுத்து இரண்டு வெவ்வேறு தடுப்பூசியும் போடப்பட்ட பிறகு அனைவரும் இரண்டரை மாதங்கள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அந்த ஆய்வில் அஸ்ட்ராஜெனகா தடுப்பூசியை முதலிலும், பைசர் தடுப்பூசியை இரண்டாவது தவணையாகவும் போட்டு கொண்டவர்களுக்கு 67% கொரோனா தாக்கும் ஆபத்து குறைவாக உள்ளதாக தெரியவந்துள்ளது. அதேசமயம் அஸ்ட்ராஜெனகா தடுப்பூசியை இரண்டு தவணையும் செலுத்தி கொண்டவர்களுக்கு 50% நோய் தாக்கும் அபாயம் குறைவாக உள்ளதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.