ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அக்கட்சியை சேர்ந்த எம்எல்ஏ ஒருவர் கோவில் கட்டியுள்ளார்.
ஆந்திரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி தலைவரும் முதல்வருமான ஜெகன்மோகன் ரெட்டிக்கு அக்கட்சியை சேர்ந்த எம்எல்ஏ மதுசூதனன் ரெட்டி என்பவர் 2 கோடி செலவு செய்து ஒரு கோவில் கட்டியுள்ளார். இந்த கோவில் சித்தூர் மாவட்டம் ஸ்ரீகாளகஸ்தி என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோவில் கட்டுமானத்தின் பின்னணியில் அரசாங்கத்தின் நலத்திட்டங்களை காட்சிப் படுத்தும் வகையில் சித்தரிக்கப்பட்டுள்ளது.
வரலாற்றில் முதல் முறையாக முதல் அமைச்சர் ஒருவருக்கு கோயில் கட்டப்பட்டது இங்குதான். அங்கே தொகுதி மக்களின் பிரச்சனைகளை குறித்த மனுக்களை அளிக்க ஒரு புகார்பெட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலில் தங்கம் மற்றும் வெள்ளியில் ஜெகன்மோகன் ரெட்டியின் உருவமும், நவரத்னா திட்டம் குறித்த படங்களும் வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆந்திர முதலமைச்சரின் குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்கள், செப்பு இலையின் மேல் வைக்கப் பட்டுள்ளது.