Categories
தேசிய செய்திகள்

திருமணமாகி 45 வருஷம் ஆச்சு… குழந்தை இல்லாத ஏக்கம்… 70 வயதில் நிறைவேறிய கனவு… மகிழ்ச்சியில் மூதாட்டி…!!!

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 70 வயதான மூதாட்டி ஒருவர் அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

குஜராத் மாநிலம் கட்ச் அருகே மூடா என்ற கிராமத்தை சேர்ந்த வயதான தம்பதிகளான ரபரி மற்றும் மஸ்டாரி ஆகியோருக்கு திருமணமாகி நாற்பத்தி ஐந்து ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாமல் தவித்து வந்துள்ளனர். இவர்களின் குடும்பத்தில் உள்ள பலரும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் குழந்தை பெற்றுக் கொண்டதை அறிந்த இவர்கள், தாமும் அவ்வாறே குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்பி மருத்துவரை அணுகி உள்ளனர். அவர்களுக்கு 70 வயதாகிய காரணத்தினால் மருத்துவர்கள் இனிமேல் உங்களால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்று கை விரித்துள்ளார்.

இருப்பினும் அந்த தம்பதிகள் மருத்துவரை தொடர்ந்து வலியுறுத்தி வந்த காரணத்தினால், இதற்கு சம்மதம் தெரிவித்த மருத்துவர்கள் மூதாட்டிக்கு ஐவிஎஃப் எனப்படும் தொழில்நுட்பத்தின் மூலம் சிகிச்சையை தொடங்கியுள்ளனர். கருவுற்ற மூதாட்டி கடந்த சில தினங்களுக்கு முன்பு அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இதனால் அவர்கள் உலகில் வயதான தாய்மார்கள் பட்டியலில் இணைந்துள்ளனர். இதுகுறித்து அந்த மூதாட்டி கூறிய போது ‘தன் குழந்தை கடவுளின் குழந்தை, என் குழந்தைக்கு நான் லாலோ என பெயரிட்டு உள்ளதாகவும்’ தெரிவித்தார். மேலும் மருத்துவர்கள் இந்த வயதில் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுப்பது என்பது மிகவும் அபூர்வமான சம்பவம் என்று தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |