சென்னையிலுள்ள சவீதா பல்கலைக்கழகத்தின் கீழ் சவீதா சட்டக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமானோர் சட்டப்படிப்பைப் படித்து வருகின்றனர். இதில் பயின்ற மாணவர்கள் வழக்கறிஞர்களாகவும், தனியார் நிறுவனங்களில் சட்ட ஆலோசகர்களாகவும் பணியாற்றுகின்றனர். இந்தச்சூழலில் இக்கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்த ஐந்து பேர் மாவட்ட நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்றவர்களாக, முத்துராஜ் திருவண்ணாமலை மாவட்டம் செங்கதிலும், ஆர்.எஸ். பிரகந்தி விழுப்புரத்திலும், எம். அமுதா ஆற்காட்டிலும் சி.பி. முல்லை வாணன் திண்டுக்கல்லிலும், வீ.சி. தாரணி ஈரோட்டிலும் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
நீதிபதியாகப் பொறுப்பேற்கவுள்ளவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். சவீதா பல்கலைக்கழக வேந்தர் என்.எம். வீரய்யன் வெற்றி பெற்றவர்களைப் பாராட்டி தங்களது பணியை நடுநிலையாகவும் கடமை உணர்வுடன் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.அதேபோல், சட்டக்கல்லூரி முதல்வர் ஆஷா சுந்தரம் இவர்களைப் போல பல நீதிபதிகளை உருவாக்கத் தேவையான அனைத்துப் பயிற்சிகளும் கல்லூரியில் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.இதனால் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.