Categories
தேசிய செய்திகள்

தலைமை ஆசிரியரின் கேடு கெட்ட செயல்…. அடித்து துவைத்து காவல்துறையில் ஒப்படைத்த பெற்றோர்…!!

ஆந்திர மாநிலத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியரை பெற்றோர்கள் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள பிடுகுரல்லா என்ற பகுதியில் இயங்கிவரும் தனியார் பள்ளியின் தலைமை ஆசிரியர் சிவாரெட்டி. இவர் எட்டாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து அந்த மாணவி நான் பள்ளிக்கு செல்ல மாட்டேன் என்று கண்ணீர் மல்க பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து காரணம் கேட்டபோது அந்த மனைவி நடந்த அத்தனையையும் அவர்களிடம் தெரிவிக்கவே, ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோர்கள் பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியரை பிடித்து தரதரவென இழுத்து வந்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமை ஆசிரியர் சிவாரெட்டியை போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |