பப்புவா நியூ கினியா அணிக்கெதிரான ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது .
டி20 உலகக் கோப்பை தொடரில் முதல் சுற்றுப் போட்டியில் ‘ பி ‘பிரிவில் உள்ள பப்புவா நியூ கினியா அணியும், ஸ்காட்லாந்து அணியும் பலப்பரீட்சை நடத்தின இதில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் குவித்தது .இதில் அதிகபட்சமாக பெர்ரிங்டன் 70 ரன்னும், கிராஸ் 45 ரன்னும் எடுத்தனர் .
பப்புவா நியூ கினியா அணி தரப்பில் கபுவா மோரியா 4 விக்கெட்டும், சாட் சோபர் 3 விக்கெட்டும் கைப்பற்றினர். இதன்பிறகு 166 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு பப்புவா நியூ கினியா அணி விளையாடியது. இறுதியாக 19.3 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 148 ரன்னில் சுருண்டது. இதனால் 17 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து அணி அபார வெற்றி பெற்றது.