Categories
தேசிய செய்திகள்

இந்திய காற்றில் விஷவாயு கலந்த பாகிஸ்தான் – பகீர் குற்றச்சாட்டு ..!!

இந்தியாவில் காற்றை மாசுபடுத்த எண்ணத்தில் ஆசைப்படும் எண்ணத்தில் பாகிஸ்தானும் சீனாவும் விஷ வாயுவை வெளியிட்டிருக்கலாம் என்று பாஜக மூத்த தலைவர் வினீத் அகர்வால் குற்றம் சாட்டியுள்ளார்.

டெல்லியில் காற்று தரமதிப்பீடு அளவு ஆபாய உள்ளது. நகரம் முழுவதும் புகை சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. காற்று மாசுபாட்டை குறைக்க வாகன கட்டுப்பாடு விதிகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்தியாவின் காற்று மாசுபடுத்தும் தீய எண்ணத்தில் பாகிஸ்தானும் , சீனாவும் விஷ வாயுவை வெளியிட்டிருக்கலாம் என்று உத்தர பிரதேச பாஜக மூத்த தலைவர் வினீத் அகர்வால் குற்றம்சாட்டியுள்ளார்.

Image result for vineet agarwal bjp

பிரதமர் மோடியும் , மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பொறுப்பேற்ற பிறகு இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் அனைத்து நடவடிக்கைகளையும் முறியடிக்கப்பட்டு உள்ளதால் விரக்தியடைந்துள்ள பாகிஸ்தான் இந்தியாவில் விஷ வாயுவை வெளியிடுள்ளதா என ஆராய வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.இந்த பிரச்சனைகளை எல்லாம் பிரதமர் மோடியும் அமித் ஷாவும் தீர்ப்பார்கள் என்று வினீத் அகர்வால் குறிப்பிட்டுள்ளார்

Categories

Tech |