Categories
உலக செய்திகள்

மீண்டும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வருமா..? பிரபல நாட்டில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு… வெளியான பரபரப்பு தகவல்..!!

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யாவில் மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ரஷ்யாவில் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் 1,015 பேர் பலியாகியுள்ளனர். இதனால் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் ரஷ்யாவில் 2 லட்சத்து 25 ஆயிரத்து 325 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே மருத்துவத்துறையினர் ரஷ்யாவில் மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள ஆர்வம் காட்டாமல் இருப்பதே தொற்று பாதிப்பு அதிகரிக்க காரணம் என்று தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தங்கள் நாடு தான் உலகின் முதல் கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக் வி-ஐ உருவாக்கியது என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. ஆனால் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் வழங்காத நிலையிலும் உலகில் உள்ள பல நாடுகளில் இந்த கொரோனா தடுப்பூசி பயன்பாட்டில் உள்ளது. ரஷ்யாவில் 35 சதவீதம் மக்கள் மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரிக்க ஆரம்பித்துள்ளதால் கட்டுப்பாடுகள் மீண்டும் அமலுக்கு வர உள்ளது. அதோடு மட்டுமில்லாமல் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளாதவராக இருக்கும் பட்சத்தில் வீட்டிலிருந்தே பணிபுரியுமாறு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதேபோல் கொரோனா தடுப்பூசி சமூகப் பணியாளர்களுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின் நாடு முழுவதும் கடும் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து முடிவெடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |