அமெரிக்க நீதிமன்றம் பிரபல வைர வியாபாரியான நிரவ் மோடியின் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டுள்ளது.
பிரபல வைர வியாபாரியான நிரவ் மோடி ரூ.13 ஆயிரம் கோடியை பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி செய்துவிட்டு லண்டனுக்கு தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து இந்திய அரசு நிரவ் மோடியை நாடு கடத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே நிரவ் மோடி தன் மீதான மோசடி வழக்குகளை ரத்து செய்யக் கோரி அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் அமெரிக்க நீதிமன்றம் அந்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.
மேலும் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட டிரஸ்டியான ரிச்சரு லெவின் என்பவர் அமெரிக்காவின் மூன்று கார்ப்பரேட் நிறுவனங்கள் சார்பாக நிரவ் மோடி மீது மோசடி புகாரை வழங்கியுள்ளார். இந்த மோசடி புகாருக்கு எதிராக நிரவ் மோடி உள்ளிட்ட மூவர் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் நிரவ் மோடியின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.