தமிழகத்தில் வெளிநாட்டு மணலை இறக்குமதி செய்ய அனுமதி இல்லை என்று பொதுப்பணித்துறை அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20-ஆம் தேதி வரை வெளிநாட்டு மணலை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூடுதல் செயலாளர் சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார். மேலும் எண்ணூர், காட்டுப்பள்ளி மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் விற்கப்படாமல் தேங்கி இருக்கும் 18,616 மெட்ரிக் டன் மலேசிய மணலை விற்க 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20-ஆம் தேதி வரை ஒப்பந்த நிறுவனத்திற்கு அவகாசம் அளித்துள்ளது. இதனை மீறி வெளிநாட்டு மணலை இறக்குமதி செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது.
Categories