Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

இந்த 11 பேர் இறங்கினால் நல்லா இருக்கும்… இந்திய அணியை தேர்வு செய்த பார்த்தீவ் பட்டேல்!!

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் பார்த்தீவ் பட்டேல் பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்து இருக்கிறார்.

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. கடந்த 17ஆம் தேதி தகுதி சுற்று போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.. இதற்கிடையே பயிற்சி போட்டிகளும் நடைபெற்று வருகிறது.. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி கடந்த 18ஆம் தேதி நடைபெற்ற பயிற்சிப் போட்டியில்  இங்கிலாந்து அணியை வீழ்த்தியது.. இன்று நடைபெறவுள்ள பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் வெல்லும் முனைப்பில் இந்திய அணி தயாராகி வருகிறது..

இதனையடுத்து வருகிற 24-ஆம் தேதி நடைபெறும் பிரதான போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி கட்டாயமாக வெற்றி பெறும் என்று பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.. அதுமட்டுமில்லாமல் பாகிஸ்தான் அணிக்கு எதிராக பிளேயிங்லெவன் இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.. அந்த வகையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் பார்த்தீவ் பட்டேல் பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்து இருக்கிறார்..

இப்போட்டியில் துவக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் கே எல் ராகுல் களமிறங்கலாம்.
3ஆவது இடத்தில் விராட் கோலியும், 4ஆவது இடத்தில் சூர்யகுமார் யாதவ் விளையாடலாம்.
மேலும் 5ஆவது இடத்தில் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட்டும் (விக்கெட் கீப்பர்), 6ஆவது இடத்தில் ஹர்திக் பாண்டியாவும் விளையாடினால் சிறப்பாக இருக்கும்.. ஹர்திக் பாண்டியா பந்து வீச  போவதில்லை என்றாலும் டெத் ஓவரில் அவரது பேட்டிங் சிறப்பாக இருக்கும்.. எனவே அவர் அணியில் விளையாடுவது முக்கியம்..

அதன் தொடர்ச்சியாக ரவீந்திர ஜடேஜா, ராகுல் சாகர் ஆகியோர் சுழல்பந்து வீச்சாளர்களாகவும், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சமி ஆகியோர் வேகப்பந்துவீச்சாளர்களாகவும் விளையாடலாம்.
மேலும் 5ஆவது பவுலராக ஷர்துல் தாகூர் அல்லது புவனேஸ்வர் குமார் இருவரில் ஒருவரை தேர்வு செய்தால் சரியாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்..

தற்போதைய சூழலில் பார்த்தால் புவனேஸ்வர் குமாரின் பந்துவீச்சு சற்று மோசமாக இருந்தாலும் கூட அனுபவ வீரர் என்ற காரணத்தால் முதலில் சில போட்டிகளில் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும், ஏதாவது ஒரு பவுலர் சொதப்பினால் கூட ஷரதுல் தாகூர் நிச்சயமாக அணியில் இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பார்த்தீவ் படேல் தேர்ந்தெடுத்துள்ள 11 வீரர்கள் இவர்கள்தான் :

1. ரோகித் சர்மா, 2. கே.எல் ராகுல், 3. விராட் கோலி, 4. சூர்யகுமார் யாதவ், 5. ரிஷப் பன்ட், 6. ஹர்திக் பாண்டியா, 7. ரவீந்திர ஜடேஜா, 8. ராகுல் சாஹர், 9. முகமது சமி, 10. பும்ரா, 11. புவனேஸ்வர் குமார் அல்லது ஷர்துல் தாக்கூர்

Categories

Tech |