Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு கல்விக் கடன் ரத்து…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக திமுக அரசு நிறைவேற்றிக் கொண்டே வருகிறது. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் அரசு தனி கவனம் செலுத்தி வருகிறது. அது மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. ஒரு சில வாக்குறுதிகள் மட்டுமே இன்னும் கேள்விக் குறியாக உள்ளது.

அவை எப்போது நிறைவேற்றப்படும் என்று மக்கள் மத்தியிலும் கேள்வி எழுந்துள்ளது. நகை கடன் தள்ளுபடி அறிவிப்பைத் தொடர்ந்து கல்வி கடன் தள்ளுபடி அறிவிப்பையும் மாணவர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். மாணவர்களின்கல்விக் கடனை ரத்து செய்வது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. எனவே விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். இது மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.

Categories

Tech |