Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டிற்கு வெட்கக்கேடு – கொந்தளிக்கும் பி.ஆர்.பாண்டியன்

தமிழ்நாட்டில் நீர் பாசனத்திற்கென்று தனி ஒரு துறையில்லாதது வெட்கக்கேடான ஒன்று என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் சாடியுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றத்திற்கு உட்பட்ட வள்ளிபுரம் – எச்சூர் இடையே, சுமார் 30 கோடி ரூபாய் செலவில் தடுப்பணை ஒன்று கட்டப்பட்டுள்ளது.அதன் பக்கவாட்டில் தடுப்புச் சுவர் கருங்கற்களால் அமைத்ததால் சில நாட்களுக்கு முன்பு சரிந்து காணப்பட்டது. இதனைச் சீரமைக்கும் பணியில் பொதுப்பணித் துறை ஈடுபட்டுள்ளது.இந்நிலையில், இந்த தடுப்பணையைத் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர். பாண்டியன் சங்கத்தினருடன் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார்.

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பாலாற்றின் குறுக்கே வீணாக சென்ற உபரி நீரைத் தடுத்து நிறுத்த தடுப்பணை கட்டிய தமிழ்நாடு அரசுக்கு வாழ்த்துகள்.ஆனால், அதற்காக பணிகள் மிகவும் மோசமாக மேற்கொள்ளப்பட்டதால் அணையின் பக்கவாட்டில் அமைக்கப்பட்ட தடுப்புச் சுவர் உடைந்துள்ளது. எனவே, இந்த சுவரை கான்கிரீட்டில் அமைக்க வேண்டும்.தடுப்பு சுவர் கட்டுமானத்தில் ஊழல் நடந்துள்ளது. ஊழல்வாதிகளைக் கண்டுபிடித்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். மீதமுள்ள பாலாற்றின் குறுக்கே 7 கி.மீ., துரத்துக்கு தடுப்பணை அமைக்க வேண்டும்.தமிழ்நாட்டில் நீர் பாசனத்திற்கு என்று தனியாக ஒரு துறை இல்லாதது வெட்கக்கேடானது” என்றார்.

Categories

Tech |