பிக்பாஸ் 5 யின் இன்றைய எபிசோடிற்கான புரோமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் சீசன்5 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ஆகும். இந்த நிகழ்ச்சியில் இதுவரை எந்த சுவாரஸ்யமும் இல்லை என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான அபிஷேக் மட்டும் அவ்வப்போது ஏதாவது கண்டன்ட் கொடுத்து வருகிறார் என ரசிகர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், இன்றைய எபிசோடின் புரோமோ வெளியாகியுள்ளது. அந்த புரோமோவில், நான் பிரியங்காவுடன் இருந்தால் தான் என் முகம் வெளியில் தெரியும் என அபிஷேக் கூறியுள்ளார். இதை கேவலம் என இமான் அண்ணாச்சி கூறினாலும், அந்த கேவலத்தை தான் செய்வேன் என அபிஷேக் கூறுகிறார்.