சூர்யாவின் அடுத்தடுத்த இரண்டு படங்களுக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சூர்யா நடிப்பில் ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இதில் ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெய் பீம் திரைப்படம் வருகிற நவம்பர் 2-ம் தேதி நேரடியாக அமேசான் பிரைமில் ரிலீஸாக உள்ளது. இதை தொடர்ந்து சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை தாணு தயாரிக்க இருக்கிறார். மேலும் பாலா அடுத்ததாக இயக்கும் புதிய படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடிப்பதோடு, அப்படத்தை தனது 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் தயாரிக்கவும் இருக்கிறார்.
இந்நிலையில் இந்த இரண்டு படங்களுக்கும் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த சூரரைப்போற்று படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் தான் இசையமைத்திருந்தார். தற்போது சூர்யாவின் அடுத்தடுத்த இரண்டு படங்களுக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க இருப்பதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.